காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சீரடி சாய்பாபா, ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அவர்களுக்கு ஆலயம் நிர்மாணித்து அவரது கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லுதல், யோகா, தியானம், வேதபாடசாலை தொடங்கி இந்து வேதங்களை கற்பித்தல்,மக்கள் நலன் வேண்டி யாகங்கள் நடத்துதல், Read More
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த மகான் ஸ்ரீராகவேந்திரர் இவர் பிறந்த ஊர் தமிழ்நாடு சிதம்பரம் அருகில் புவனகிரி. திம்மண்ணபட்டர் கோ பி காம்பால் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடநாதன் சிறு வயதிலேயே நிறைய கல்வி ஞானமும் வேதம் சாஸ்திரம் வேதாந்தத்தை இலக்கியத்தையும் பயின்றவர். அப்பொழுது மத்வ பீடாதிபதியாக இருந்த சுதீந்திர தீர்த்தர் அவர்களிடம் அனைத்து கல்வி ஞானத்தையும் பெற்றவர், மக்களிடத்தில் மத்வ மதத்தையும் வைணவ நெறியும் போதித்தவர், வீணை வாசிப்பதில் மிகவும் சிறந்தவர். குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் வேதம் கற்பித்தவர் இவர் விஷ்ணு பக்தரின் பிரகலாதனின் அவதாரமான கருதப்படுகிறார். குரு சுதீந்திர தீர்த்தர் கட்டளைப்படி 1621 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் மத்வ மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ வேங்கடநாதன் ஸ்ரீராகவேந்திரர் ஆக பொறுப்பேற்றார். பக்தர்களுக்கு அவர்களது குறைகளை தீர்த்து வைப்பார் வரும் பக்தர்களுக்கு கஷ்டங்களிலிருந்து நல் வழிகாட்டியாக இருந்து வந்தார் .
ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவர் 1894 ஆம் ஆண்டு ஜய வருடம் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரது இயற்பெயர் சுவாமிநாதன் தனது 13 வயதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 68ஆவது பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இவருக்கு சந்திரசேகர சரஸ்வதி என பெயர் சூட்டப்பட்டது. அவர் சமஸ்கிரதம், வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் இதிகாசம் உபநிடதங்கள் ஆழமாகக் கற்றார்.
உண்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். இவர் எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வார். பாதயாத்திரையாக நாடு முழுவதும் சுற்றி ஆன்மீகக் கருத்துக்களை பரப்பினார். காஞ்சி மடத்தின் குருவாக 87 ஆண்டுகள் இருந்தார். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆதிசங்கரருக்கு ஆறு சேத்திரங்களில் மண்டபம் நிர்மாணித்தார். ஏழைப் பங்காளனாக பிடி அரிசித் திட்டம், பசுக்கள் சம்ரக்ஷண நோயுற்றவர்களுக்கு பிரசாதம் என ஏற்படுத்தினார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா நடமாடும் தெய்வமாக திகழ்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து நன்னெறி நல்வழி படுத்திய மகா பெரியவா என்ற என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து அவருடைய கருணை நிழலில் இளைப்பாறிக் துயரங்கள் மறைந்து உள்ளம் தூய்மை அடைந்த பக்தர்கள் ஏராளமானோர் காஞ்சி பெரியவர் உடன் தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு தழுதழுக்கும் கண்கள் பனிக்கும் உடல் சிலிர்க்கும் .
ஓம் சீரடி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்.
கலியுகத்தில் அவதார புருஷராகவும், நம்பிக்கையாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் சீரடி சாய்பாபா தன்னுடைய 16 வயதில் 1854ஆம் ஆண்டு சீரடிக்கு வருகை புரிந்தார். சீரடியில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தினார். அவர் சதா சர்வ காலம் அல்லா மாலிக் என்று கூறிக் கொண்டிருப்பார். பாபாவின் சீடரான சாந்த்படீல் ஒரு நாள் தாகம் எடுப்பதாக கூறினார் பாபா தன்னிடம் இருந்த தடியால் பூமியில் அடிக்க தண்ணீர் வந்தது. ஒருநாள் தன்னுடைய குதிரையைக் காணவில்லை என்று பாபாவிடம் கேட்க பாபா குதிரை இருக்குமிடத்தைக் கூறினார் சீரடியில் மகான் ச பாதி என்பவர் பாபாவை முதல் முதலில் சாப் என்று அழைத்தார்.