ஓம் சீரடி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்.
கலியுகத்தில் அவதார புருஷராகவும், நம்பிக்கையாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் சீரடி சாய்பாபா தன்னுடைய 16 வயதில் 1854ஆம் ஆண்டு சீரடிக்கு வருகை புரிந்தார். சீரடியில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தினார். அவர் சதா சர்வ காலம் அல்லா மாலிக் என்று கூறிக் கொண்டிருப்பார். பாபாவின் சீடரான சாந்த்படீல் ஒரு நாள் தாகம் எடுப்பதாக கூறினார் பாபா தன்னிடம் இருந்த தடியால் பூமியில் அடிக்க தண்ணீர் வந்தது. ஒருநாள் தன்னுடைய குதிரையைக் காணவில்லை என்று பாபாவிடம் கேட்க பாபா குதிரை இருக்குமிடத்தைக் கூறினார் சீரடியில் மகான் ச பாதி என்பவர் பாபாவை முதல் முதலில் சாப் என்று அழைத்தார்.
நாளடைவில் அதுவே சாய்பாபா என்று அழைக்கப்பட்டது. சீரடியில் ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்தார் பக்தர்களுக்கு அருளாசியும் குழந்தைகளுக்கு வியப்பை ஏற்படுத்தும்படி பல அற்புதங்களை நிகழ்த்தினார். அவர் தினம்தோறும் துவாரகாமாயி இருக்கும் இடத்தில் விளக்கு ஏற்றி வைப்பார் பாபாவை காண எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரையும் வயிறார உணவு உண்ணும் படி உணவை பெருகச் செய்தார். நம்பிக்கை பொறுமை இந்த இரண்டையும் பக்தர்களிடம் ஏற்படுத்தினார் சீரடியில் அவர் மூட்டிய அக்னி குண்டம் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது, இன்றும் வரும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜயதசமியன்று சீரடியில் ஜீவசமாதி அடைந்தார். கடந்த 100 ஆண்டுகளாக தன்னை நாடி வருபவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் வழிபாடு செய்பவர்களுக்கும் அவர் இருந்த இடத்தில் இருந்தே ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் இருக்கும்போது கூறிய உரையில் தன்னுடைய ஆலயம் கலியுகத்தில் அனைத்து இடங்களிலும் உருவாகும் எனக் கூறினார் பிரார்த்தனை செய்பவர்கள் ஒன்பது வாரம் வியாழக்கிழமை விரதமிருந்து பாபாவை வேண்டி நாம் பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.