பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த மகான் ஸ்ரீராகவேந்திரர் இவர் பிறந்த ஊர் தமிழ்நாடு சிதம்பரம் அருகில் புவனகிரி. திம்மண்ணபட்டர் கோ பி காம்பால் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடநாதன் சிறு வயதிலேயே நிறைய கல்வி ஞானமும் வேதம் சாஸ்திரம் வேதாந்தத்தை இலக்கியத்தையும் பயின்றவர். அப்பொழுது மத்வ பீடாதிபதியாக இருந்த சுதீந்திர தீர்த்தர் அவர்களிடம் அனைத்து கல்வி ஞானத்தையும் பெற்றவர், மக்களிடத்தில் மத்வ மதத்தையும் வைணவ நெறியும் போதித்தவர், வீணை வாசிப்பதில் மிகவும் சிறந்தவர். குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் வேதம் கற்பித்தவர் இவர் விஷ்ணு பக்தரின் பிரகலாதனின் அவதாரமான கருதப்படுகிறார். குரு சுதீந்திர தீர்த்தர் கட்டளைப்படி 1621 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் மத்வ மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ வேங்கடநாதன் ஸ்ரீராகவேந்திரர் ஆக பொறுப்பேற்றார். பக்தர்களுக்கு அவர்களது குறைகளை தீர்த்து வைப்பார் வரும் பக்தர்களுக்கு கஷ்டங்களிலிருந்து நல் வழிகாட்டியாக இருந்து வந்தார் .
சிறிது காலம் கழித்து யாத்திரை செல்லும் வழியில் நிறைய சீடர்கள் குரு ராகவேந்திரர் களிடம் சிஷ்யராக இணைந்தனர். யாத்திரை செல்லும் வழியில் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தினார் சீடர்களுக்கு குருபக்தியை போதித்தார். மாஞ்சால கிராமத்தில் நான் பிருந்தாவனத்தில் அமரப் போவதாக சீடர்களுக்கு தெரிவித்தார் தன்னுடன் இருந்த சீடர்களில் அப்பன்னா இன்னும் சிலர் குருவுடைய பரிபூரண ஆசி பெற்றவர். ஆந்திரா பிரதேசம் மாஞ்சாலி கிராமம் நாளடைவில் குரு ராகவேந்திரர் வந்தவுடன் மந்திராலயம் எனும் பெயர் போற்றப்பட்டது. இன்றும் மந்திராலயம் செல்பவர்களுக்கு தாங்கள் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும் குரு ஆசிர்வாதம் கிடைக்கும் கண்கண்ட தெய்வம் கருணைக்கடல் வேண்டுவதற்கு முன்பே வரமளிக்கும் தெய்வம். ஆவணி மாதம் பௌர்ணமி மறுநாள் காயத்ரீ ஜபம் அன்று 1671 ஆண்டு ஸ்ரீராகவேந்திரர் சித்தி அடைந்தார் வியாழக்கிழமை குரு ராகவேந்திரருக்கு உகந்த நாளாகும் கலியுகத்தில் சிறிது காலமாக குரு ராகவேந்திரர் மகிமை அனைத்து ஊர்களிலும் பிரசித்தி பெற்றிருக்கிறது வாழ்க்கையில் ஒருமுறையாவது மந்திராலயம் சென்று குரு ராகவேந்திரர் தரிசனம் செய்ய குரு ராகவேந்திரரை பிரார்த்திக்கிறேன். குருவே துணை.
குரு ராகவேந்திரர் அளித்த உரை
இந்தக் கலியுகத்தில் இன்றும் பிருந்தாவனத்தில் இருந்து வருகின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.