குரு தியானம்
அபார கருணா சிந்தும் ஞான தம் சாந்த ரூபிணம். ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வகம்.
சத்குரு சரணாரவிந்தாப்யாம் நமஹ.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாக்ஷாத் பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா
எல்லாம் வல்ல குரு கடாக்ஷத்தாலூம் குலதெய்அனுக்கிரகத்துடன் இஷ்டதெய்வ சுப்பிரமணிய சுவாமி ஆசீர்வாதத்துடன்,
நடமாடும் தெய்வமாக நம்மையெல்லாம் வாழவைத்துக் கொண்டிருக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாபெரியவா என்று அழைக்கப்படும் தெய்வம் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம், என்று பெருமை நமக்கு இருக்கிறது. மஹாபெரியவாளின் அற்புதங்கள் எத்தனையோ இருக்கிறது. அதில் என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட ஒரு சில அற்புதங்கள் பொதுவாக மகா பெரியவாள் கோவில்பட்டி வந்த சமயத்தில் என்னுடைய தாயார் தந்தை யார் மகா பெரியவாளை தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆசீர்வாதத்தின் படி நான் அவர்களுக்கு மகனாக பிறந்து எனக்கு பத்து வயதில் குளித்தலை காஞ்சி மடம் பாடசாலையில் ரிக்வேதம் பயில்வதற்காக சேர்ந்தேன். முதல் முதலில் மகா பெரியவாள் ஆசீர்வாதத்தால் எனது குருநாதர் கே எஸ் சுப்ரமணிய கனபாடிகள் அண்ணா அவர்களிடம் நான் ரிக்வேதம் பயின்றேன். எனக்கு சிறுவயதிலேயே மகா பெரியவாளுடைய ஆசீர்வாதம் கிடைத்ததனால் காஞ்சி மட பாடசாலையில் பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
பாடசாலையிலிருந்து சமயத்தில் மகா பெரியவாளை தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னால் போக முடியவில்லை அதன்பிறகு மகா பெரியவாள் முக்தி அடைந்த செய்தி பாடசாலைக்கு வந்ததும் எனது குருநாதர் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார் அப்போதிலிருந்து என் மனதில் ஒரு சின்ன சஞ்சலம் சங்கடம் ஏற்பட்டது தெய்வம் இருக்கும்போது அதை தரிசனம் செய்ய வில்லையே கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று அழுது புலம்பினேன். அதன் பிறகு ஒருநாள் எனது கனவில் மகா பெரியவாளின் உருவம் தென்பட்டது.
இன்றும் இப்பொழுதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கனவில் வந்தது அவர்தான் என்று ஊர்ஜிதம் செய்வதற்காக ஒருமுறை காஞ்சிபுரம் சென்றேன்.
என் கனவில் வந்ததும் காஞ்சிபுரத்தில் இருந்த ஒரு சில அறிகுறிகளை வைத்து வந்தது மகா பெரியவர் என்று உணர்ந்தேன். அதன்பிறகு பாடசாலைகள் படிப்பை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பினேன். அதிலிருந்து எனக்கு மஹாபெரியவாளின் மீது அபரிமிதமான பக்தியும் நம்பிக்கை ஏற்பட்டது, யார் தன்னிடம் வந்து எது கேட்டாலும் நா இருக்கிறேன் என்ற வார்த்தையை மட்டும் நீங்கள் சொல்லுங்கள் மகா பெரியவாள் உங்களிடமிருந்து உங்கள் குறைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் என்று சொல்ல ஆரம்பித்தேன். பார்ப்பவர்கள் அத்தனை பேரிடமும் பெரியவரிடம் நீங்கள் எதை கேட்டாலும் அதை உங்களுக்கு தருவார் நாம் பண்ண வேண்டிய ஒரே விஷயம் முழுமையான பக்தி செலுத்த வேண்டியது, குரு பக்தி இருந்தால் உலகத்தில் எதை வேண்டுமானாலும் ஜெயித்து விடலாம் மாதா பிதா குரு தெய்வம் என்று நான்குமாக அவரே இருக்கிறார், எனக்கு சதாசர்வகாலமும் பெரியவாளின் சொல்படி நடக்க வேண்டும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் எல்லோருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் சொல்லிக் கொடுத்து நல்ல விஷயங்களை செய்ய சொல்லி குரு உங்களுக்கு துணை இருப்பார் என்று சொல்லி நிறைய பேருக்கு வழிகாட்டியாக இருந்து உள்ளேன்.
எனக்கு இப்பொழுது சிறிது காலம் சிறிய ஆசை மகா பெரியவாளுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் இது எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது அது கொஞ்சம் துரிதமாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது, அதற்கு முதல் படியாக ஸ்ரீ சத்குரு ஞானபீடம் என்ற ஒரு டிரஸ்ட் அமைத்து அதை பதிவு செய்து அதன் மூலமாக மகா பெரியவாளுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் மகா பெரியவாளின் அற்புதமான தெய்வத்தின் குரலில் கூறியபடி அனைவருக்கும், பக்தர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் குருவருள் இருந்தால் திருவருள் தானாக தேடி வரும் குருவருள் இல்லையெனில் திருவருள் விலகி நிற்கும் மகா பெரியவாளுக்கு ஒரு சில இடங்களில் ஆலயம் இருக்கிறது அடியேனுடைய ஆசை தெற்கே காஞ்சி மடம் இருக்கிறது ஆனால் மகா பெரியவாளுக்கு என்று ஆலயம் எதுவுமில்லை அடியேனுடைய ஒரு சிறு முயற்சி மகா பெரியவாளுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் பொதுவாக மகா பெரியவாளுடைய சீடனாகவும் பக்தனாகவும் இருப்பவர்கள் இந்த ஸ்ரீ சத்குரு ஞான பீடத்தில் இணைந்து மகா பெரியவாளுக்கு ஆலயம் எழுப்ப உறுதுணையாக இருக்க கேட்டுக்கொள்கிறேன் குருவருள் பெற அனைவரையும் அழைக்கிறேன்.